Show all

5,80,00,000 காணொளிகளை அழித்தது வலையொளி (YOUTUBE)! வன்முறைப் பேச்சு, பெண்கள்- குழந்தை ஆபாச சித்திரிப்பு காணொளிகள்

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைக் கொண்ட மற்றும் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாகச் சித்திரிக்கும் மோசமான காணொளிகள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் வலையொளிக்கு தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகின்றன. வலையொளியும் இவற்றைத் தடுப்பதற்காகத் தொழில்நுட்பரீதியாக சில முயற்சிகளை எடுத்துவருகிறது. இருந்தும்கூட, இன்னும் வன்முறையைத் தூண்டும் மற்றும் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளைக் கொண்ட காணொளிகளை முழுமையாகத் தடுக்கவோ, நீக்கவோ முடிவதில்லை. 

இதற்காக தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், காணொளிகளை ஆராய்ந்து நீக்குவதற்காக ஏராளமான பணியாளர்களையும் நியமித்துள்ளது வலையொளி. 

இந்த சிக்கல்குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், மொத்தம் எவ்வளவு காணொளிகள், ஒளிபரப்புநிறுவனங்கள் இப்படி தடைசெய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது வலையொளி. இப்படி இந்நிறுவனம் தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல்முறை. 

வலையொளியின் விதிகளை ஏதேனும் ஒரு காணொளி மீறினால், உடனே அந்த சானலுக்கு 'நிறுத்தம்' அனுப்பப்படும். இது எதனால் அனுப்பப்பட்டது என ஆராய்ந்து, அந்த ஒளிபரப்பின் உரிமையாளர் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். மாறாக, மீண்டும் விதிகளை மீறினால், இரண்டாவது 'நிறுத்தம்' அனுப்பப்படும். இப்படி 90 நாட்களுக்குள் ஒரு ஒளிபரப்பு நிறுவனம் மூன்று 'நிறுத்தங்கள்' வாங்கிவிட்டால், அந்த ஒளிபரப்பு நிறுவனம் முழுமையாக வலையொளியிலிருந்து நீக்கப்படும். இது நடந்தால், அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின் அனைத்து காணொளிகளும் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இப்படி மூன்று மாத இடைவெளியில் 5.8 கோடி காணொளிகளை வலையொளி விதிமுறைகளை மீறியதற்காக நீக்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.