Show all

224 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. எகிப்து எல்லையைக் கடந்து ரஷ்ய நோக்கி சென்ற போது சீனாய் பெனிசுலாவில் சார்கோ என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பயணித்த விமானம் புறப்பட்ட 23 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான விமானத்தை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மத்திய சீனாய் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது தெரியவந்தது. இந்த விமானத்தில் இருந்த 17 குழந்தைகள் உட்பட 224 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியுள்ள எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மீட்பு பணிகளுக்கு பிறகே பயணிகளின் நிலை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் என்றும் எகிப்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.