Show all

மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல்

மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்; வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்கிற இஸ்லாமியர்கள், அங்கு மினாவில் உள்ள சாத்தான் சுவரில் கல் வீசும் சடங்கில் கலந்துகொள்வது வழக்கம்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது, சாத்தான் சுவரில் கல் வீச்சு நடந்தபோது திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சுமார் 796 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியா அரசின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாக அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் தற்போது புதிய கணக்கீட்டை வெளியிட்டுள்ளது. இந்தக் கணக்கீடு அரசு வெளியிட்டுள்ள தொகையை விட 3 மடங்கு அதிகம். சவூதி அரேபிய அரசு செப்டம்பர் 26க்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கையை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஈரான் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. 464 ஈரானியர்கள் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தப்படியாக 305 நைஜீரிய மக்களும், 190 எகிப்தியர்களும் உயிரிழந்தனர். இந்தியா தரப்பில் 129 பேர் உயிரிழந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.