Show all

தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில் பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. பாமகவும் தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி இல்லை, மத்தியில் மட்டுமே பாஜவுடன் கூட்டணி என்று அறிவித்தது. மேலும், சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்தது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் கட்சியுடனே கூட்டணி என்றும் கூறி வருகிறது. தேமுதிக இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் தேமுதிக, பாமக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்றே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தலைச் சந்திப்போம் என்று பாஜக கூறி வருகிறது.

தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பாஜக தங்களைத் தயார்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களைப் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.