Show all

சீக்கிய அமைப்பு அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி, அமெரிக்காவில் உள்ள நீதிக்கான சீக்கியர்கள் என்ற சீக்கிய அமைப்பு, அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரையன் கோகன், வழக்கில் உள்ள அனைத்து சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தது எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து அங்குள்ள மேல்முறையீட்டு கோர்ட்டில் சீக்கிய அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ததுடன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மறுவிசாரணை கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக சீக்கிய அமைப்பு கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.