Show all

செப்டம்பர் 17 அன்று கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபாலி படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த வாரம் சென்னையில் படத்தின் போட்டோஷுட் நடந்தது. அப்போது ரஜினி, சால்ட் அண்ட் பெப்பர் லுக் விக் அணிந்து வௌ;ளை தாடியுடன் காணப்பட்டார். கொரியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் இந்த போட்டோ ஷுட்டில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் போட்டோ ஷுட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17 அன்று கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.