Show all

சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள், அவரின் உறவினர், நண்பர் வீடுகளில் 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தியது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில் பத்திரிகையாளர்களிடையே ஆதாரத்தை வெளியிட்டு கூறுகையில், 2ஜி ஊழல் இன்னும் பல ஊழல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பது எங்களுக்கு கிடைத்த பல்வேறு உரையாடல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

திமுக எம். பி கனிமொழி - ஜாபர் சேட் , சரத்குமார் ரெட்டி - ஜாபர் சேட், சண்முகநாதன் - ஜாபர் சேட் ஆகியோரிடையே நடந்த உரையாடல் பதிவு தொடர்பான ஆடியோ ஆதாரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அந்த பதிவுகளிலிருந்து 2ஜி ஊழலும், அதனை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்தது என்பது தெரிய வருகிறது.

இதற்கு அவரது உதவியாளர் சண்முகநாதன் மற்றும் தமிழகத்தின் அப்போதைய உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட் உரையாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

இந்த வழக்கிலிருந்து கனிமொழியை காப்பாற்றும் வகையில் இது தொடர்பான ஆவணங்களை திருத்த முயன்றதன் மூலம் தெரியவருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தனை மாதங்கள் கழித்து சண்முகநாதனை சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.