Show all

என்னுடைய ஆதரவு விஷாலுக்கே! நடிகர் ரகுமான்

சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியை எதிர்த்து நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி களம் காண்கிறது. இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், என்னுடைய ஆதரவு விஷாலுக்கே என தெரிவித்துள்ளார், நடிகர் ரகுமான்.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரகுமான், செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்குத்தான் என்னுடைய ஆதரவு. அவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறைகள். அவர்களிடம் நிறைய நம்பிக்கையும் கனவுகளும் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பத்தில் நான் மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.

நிறைய விஷயங்கள் செய்யவேண்டும் என அவர்கள் துடிக்கும்போது, அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். என்னுடைய முழு ஆதரவும் விஷாலுக்கும், விஷால் அணிக்கும்தான். என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.