Show all

அனைத்து வழக்குகளையும் இந்தியாவும் இத்தாலியும் நிறுத்திவைக்க வேண்டும்

கேரள கடற்கரையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கடற்கொள்ளையர்கள் என தவறாக கருதி “எண்டிரிக்கா லெக்ஸிகோ” என்ற கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மாச்சிமிலோனா லதோர் மற்றும் சால்வதோர் கிரோனோ ஆகியோர் சுட்டுக்கொன்றனர். .இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை இந்தியா விசாரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநா தீர்ப்பாயத்தில் இத்தாலி மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஐநா தீர்ப்பாயம், இத்தாலி கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் இந்தியாவும் இத்தாலியும் நிறுத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா , இத்தாலி ஆகிய இருநாடுகளும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் முதற்கட்ட அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் புதிய விசாரணைகள் எதுவும் தொடங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.