Show all

ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அங்கு ரணிலுக்கு ராஜபக்சே கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விட்ட காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வந்த ரணில் விக்ரமசிங்கே, முன் வரிசையில் இருந்தவர்களை சந்திக்க சென்றார். அப்போது அனைவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். அதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் எழுந்து நின்றார். அவர் அருகே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நடந்து சென்றார். உடனே ராஜபக்சே சிரித்துக் கொண்டே அவருக்கு கைகொடுத்தார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்கே அதை காணாதவர் போல் கை கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் ராஜபக்சேவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. முன் வரிசையில் இருந்த புத்த குருமார்களுக்கு முதலில் ரணில் விக்ரமசிங்கே கைகொடுத்து வாழ்த்து பெற்றார்.திரும்பி வருகையில் ராஜபக்சேவுக்கு ரணில் கைகொடுத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.