Show all

நடிகர் ரஜினியை விஷால் குழுவினர் சந்தித்து பேசினார்

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி விஷால் தலைமையில் போட்டியிடும் அணியினர் நடிகர், நடிகைகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதனையொட்டி நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும் விஷால் அணியும் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். விஷால் குழுவில் நாசர்,கருணாஸ்,கார்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினியை விஷால் குழுவினர் சந்தித்து பேசினார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வருமாறு கோரிக்கை வைத்தனர்.மேலும் தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.