Show all

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாக...

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பதாகவும், இலங்கை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வந்த விடுதலைப்புலிகளின் போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது சடலத்தைக் காட்டும் வீடியோ காட்சிகளை இலங்கை அரசு வெளியிட்டது. அத்துடன் இலங்கை நடைபெற்ற உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்தது.

ஆனால், பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை இன்னும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்தினரிடமிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாக சிங்களப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தகம் ஒன்றில் இந்த தகவல் இடம் பெற்றிருப்பதாக அந்த சிங்கள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த செய்தியால் தற்போது இலங்கை அரசும், அந்த நாட்டின் அரசியல்வாதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.