Show all

மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம் என்ற பெருமையை பெறுகிறது. இது அபுதாபியில் இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 2008ல் நிறுவப்பட்ட மஸ்தார் நகரின் மக்கள் தொகை சுமார் 50,000..

மஸ்தார் நகரில் மக்களுக்கு தேவையான மின்சாரம் காற்றாலை அல்லது சோலார் பேனல் மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நகரில் போக்குவரத்து முற்றிலும் சூரிய சக்தி அல்லது மறு சுழற்சி செய்யத்தக்க எரி சக்தி மூலமாக இயங்கி வருகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.

உலகில் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் போக்குவரத்தின் போது பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனா ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறி, காற்று அசுத்தமடைகிறது. ஆனால், மஸ்தார் நகரில் வாகனங்களில் புகை வெளியேறாததால், வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாடு முற்றிலும் தடுக்கப்படுகிறது. இன்றைய வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், பல நாடுகளிலும் போக்குவரத்து வாகனங்களும் தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதால் சுற்றுப்புறம் மாசு அடைந்து (குளோபல்) வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் துருவ பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. பருவமழை தவறிப்போதல் போன்ற பிரச்சனைகளால் ஒரு நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. சுற்றுப்புறம் மாசடைவதால் மக்களுக்கு கான்சர், நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.

நேற்று (ஆக.16) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இரண்டாம் நாள் பயணமாக சுற்றுச்சூழல் மாசு அறவே இல்லாத மஸ்தார் நகருக்கு சென்றார். அந்நகரின் தூய்மையை கண்டு வியந்தார். அந்நகரில் இயங்கும் தானியங்கி காரில் பயணம் செய்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.