Show all

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில் கூகுள்

உலகின் முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வகையில் பிரத்யேகமான டூடுல்களை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், இன்று இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி தனது டூடுலில், இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில், படம் வெளியிட்டுள்ளது.

இந்த டூடுல் படத்தில், காந்தியடிகள் 1930ல் தண்டி யாத்திரையை வழிநடத்திச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, காந்தியடிகள் குஜராத்தின் தண்டிக்கு நடைபயணமாக யாத்திரை சென்று உப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கமான இந்த போராட்டம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், அதனை டூடுல் படம் மூலம் தனது பயன்பாட்டாளர்களுக்கு கூகுள் விளக்கியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.