Show all

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்ட

நாட்டின் 69 வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்டத்தை அமுல் படுத்துவது குறித்து மோடி அறிவிப்பார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இனி வரும் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை, அவர்கள் பணிக்கு சேர்ந்த ஆண்டை கொண்டு வேறுபடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களைவிட, முன்பே ஓய்வு பெற்றவர்களுக்கு குறைவான பென்ஷன் கிடைக்கிறது. எனவே, ஒரே மாதிரியான ரேங்கில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும், ஒரே மாதிரியான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், அதுகுறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மோடியின் சுதந்திர தின உரையில், செங்கோட்டையில், மூவர்ணகொடியின் கீழ் நின்று ராணுவத்தினருக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன் நாங்கள் ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம். சில பேச்சுக்கள் மட்டுமே நிலுவையில் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் மோடி ஒரு ரேங்க் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறியவர் அமுல்படுத்துவதாக ஏன் அறிவிக்கவில்லை? என்று முன்னாள் ராணுவ வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் இது 17 மாதங்கள் முன்பே ஏற்கப்பட்டுவிட்டது. இப்போது அமுல்படுத்தும் அறிவிப்பை மட்டுமே எதிர்பார்த்தோம் ஆனால் மோடி அதனை அறிவிக்காமல் விட்டுவிட்டார் எனவே இனி வரும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் போர் வெற்றிவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிக்கப்போவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.