Show all

ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதையொட்டி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் செய்த செயல்களுக்காக ஜப்பான் திரும்பத்திரும்ப மன்னிப்பு கேட்டுள்ளது. போர் முடிந்ததில் இருந்து இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கு எங்களை நாங்களே அர்ப்பணித்து வருகிறோம். போரில் பலியானோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிய நாடுகள் பட்ட துயரங்கள், எங்கள் இதயத்தில் பதிந்துள்ளன. இனிவரும் சந்ததிகள், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.