Show all

அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடியேற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பிடமிருந்து சில விவரங்களை கேட்டு பெற்றுள்ளது. அதன் விவரம்:

கடந்த ஆண்டில் மொத்தமாக 76 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறையில் பணிபுரிவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையில் இந்த விசா பெற்றவர்களில் 86 சதவீதம் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட அவுட்சோர்சிங் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக எச்-1பி விசா பெற்றவர்கள் பட்டியலில் 5 சதவீதத்துடன் சீனா 2-ம் இடத்தில் உள்ளது. வேறு எந்த நாடும் 1 சதவீதத்தைத் தாண்டவில்லை.

இயந்திரவியல், மின்னணு, கட்டிடவியல், ரசாயனம், விமானம் உட்பட பல்வேறு பொறியியல் துறையில் பணிபுரிந்து கொண்டு இந்த விசா பெற்றவர்களில் 47 சதவீதம் பேர் இந்தியர்கள் (8,103). அடுத்தபடியாக சீனா 19.5சதவீதத்துடன் 2-ம் இடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.