Show all

. உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது

உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, ஏழைகளுக்கு உணவில்லை என்று கூறியதற்கு, தற்போது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரான்சில் இருக்கும் ஒரு மெக்டொனால்டு விற்பனை மையத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர், தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை, கடைக்கு அருகில் இருந்த வீடற்றவர்களுக்கு கொடுத்துள்ளார். இதை அறிந்த மெக்டொனால்டு நிர்வாகம், தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், “வீடு இல்லாத, நாடோடி ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க கூடாது. மெக்டொனால்டு பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்காக இந்த நாட்டில் கடை வைத்திருக்கவில்லை” என தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கை டுவிட்டரில் வெளியாகி, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள மெக்டொனால்டு, தங்களுடைய ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தனிப்பட்ட வகையில் யாரையாவது பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.