Show all

தமிழ்நாட்டில் கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு பிறகு சாலை விபத்து சார்ந்த மரணங்கள்

தமிழ்நாட்டில் கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு பிறகு சாலை விபத்து சார்ந்த மரணங்கள் குறைந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாயமாக அணிந்து வாகனம் ஓட்டும் சட்டத்தை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும் என விபத்து இழப்பீடு மேல்முறையீட்டு வழக்கு ஒன்றின் தீர்ப்பின்போது சென்னை உயர;நீதிமன்றம் அறிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாய தலைக்கவச சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர;நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேற்படி சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டிய கட்டாயம் தொடர்பாக நீதிபதியின் முன்பு அரசு வழக்கறிஞர் சில புள்ளி விபரங்களை தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் இந்த (2015) ஆண்டின் ஜனவரி மாதம் நடைபெற்ற 2,784 சாலை விபத்துகளில் 599 பேர் பலியானதாகவும், பிப்ரவரி மாதம் நடைபெற்ற

2,476 சாலை விபத்துகளில் 481 பேர் பலியானதாகவும் மார்ச் மாதம் நடைபெற்ற

2,542 சாலை விபத்துகளில் 572 பேர் பலியானதாகவும், ஏப்ரல் மாதம் நடைபெற்ற

2,362 சாலை விபத்துகளில் 543 பேர் பலியானதாகவும், மே மாதம் நடைபெற்ற

2,460 சாலை விபத்துகளில் 599 பேர் பலியானதாகவும், ஜூன் மாதம் நடைபெற்ற

2,510 சாலை விபத்துகளில் 582 பேர் பலியானதாகவும், ஜூலை மாதம் நடைபெற்ற

2,313 சாலை விபத்துகளில் 498 பேர் பலியானதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விபரங்களை குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதி கிருபாகரன் இவ்வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.