Show all

விண்வெளியில் வெற்றி கரமாக கீரை விளைய வைத்ததற்கு 'நாசா விஞ்ஞா னிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளிக்கு வீரர்கள் சென்று வருகின்றனர்.

அங்கு அவர்கள் சாப்பிட புதிய உணவுகள் கிடைப்பதில்லை. ஆப்பிள், கேரட் போன்றவை விண்கலம் மூலம் அனுப்பப்படுகிறது. இவை விசேஷமாக தயாரிக் கப்படுகின்றன. இதன் மூலம் ஒருவரது உணவுச்செலவு ரூ.6 லட்சம் வரை ஆகிறது.

எனவே, விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகள் பயிரிட திட்டமிடப்பட்டது. அதற்கான முயற்சியில் நாசா மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது.

வெஜ்-01 என பெயரிடப்பட்ட சிவப்பு நிற கீரையை நாசாவும், ஆர்பிட்டல் தொழில் நுட்ப கழகமும் இணைந்து கடந்த ஜூலை 8-ந் தேதி அங்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தோட்டத்தில் ஒட்டு முறையில் விதைத்தனர்.

அதற்காக கீரை விதைகள் 15 மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே வைக்கப் பட்டன. விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து 33 நாட்கள் வளர்ந்தது. அதற்காக செடிகளுக்கு 'சிரிஞ்ச் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டது.33 நாட்களுக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று இரவு அந்த கீரை அறுவடை செய்யப்பட்டது. பூமிக்கு வெளியே விளைய வைக்கப்பட்ட அந்த கீரையை விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி முதல் ஆளாக வேக வைக்காமல் பச்சையாக ருசி பார்த்தார்.

ஆகா கீரை அற்புதமாக உள்ளது என்று அவர் பாராட்டினார். அச்செய்தியை நாசாவுக்கு அனுப்பி வைத்தார். அவரை தொடர்ந்து விண்வெளியில் இருக்கும் மற்ற வீரர்களும் ஆலிவ் எண்ணை, வினிகர் சேர்த்து ருசி பார்த்தனர். முன்னதாக சிட்ரிக் அமிலம் சார்ந்த கரைசல் மூலம் அதை சுத்தம் செய்தனர்.

விண்வெளியில் வெற்றி கரமாக கீரை விளைய வைத்ததற்கு நாசா விஞ்ஞா னிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர். விண்வெளியில் உணவு வகைகளை உற்பத்தி செய்வது உணவு தேவைக் காக மட்டுமின்றி விண்வெளி வீரர்களுக்கு மனரீதியாக உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித் தனர்.

எதிர்காலத்தில் நீண்ட தூர செவ்வாய் கிரக பயணத்துக்கும் இந்த விண் வெளி உணவு உற்பத்தி மிக பயனுள்ள தாக இருக்கும் என்றும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.