Show all

தனது வீட்டின் பின்புறமுள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, ரேடியோ அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெள

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

இங்கிலாந்தின் குளோவ்ஸ்டெர்ஷைர் நகரில் அமெச்சூர் ரேடியோ எனப்படும் ‘ஹேம் ரேடியோ' ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார் அட்ரியென். இவர் தனது வீட்டின் பின்புறமுள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் பேசி சாதனை படைத்துள்ளார்.

அட்ரியெனின் அழைப்பை விண்வெளியில் வட்டமிட்டுவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஒரு வீரர் கவனித்து விட்டார். உடனடியாக அங்கிருந்த ரிசீவரை எடுத்து, ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என அவர் பதில் அளித்தார்.

இதைக் கேட்டு ஆனந்தமடைந்த அட்ரியென், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் எப்படி உள்ளன? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசையின் தூரத்தை கடந்த நிலையில் அங்கிருந்து காண்கையில் அவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக கூறியுள்ளார்.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் தற்போது எங்கு சுற்றிக் கொண்டுள்ளது?, நமது நகரின் மீது, குறிப்பாக வெகு துல்லியமாக நமது வீட்டின் மேற்பரப்பை எந்த நேரத்தில் கடக்கும்? என பலமுறை நன்கு ஆராய்ந்து, முறையாக திட்டமிட்டு செயல்பட்டதாலேயே அட்ரியென்னால் இந்தச் சாதனையை செய்ய முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்ரியெனின் இந்த முயற்சி ஜெயித்ததன் மூலம் இனி வரும் காலங்களில் உலகின் எந்த மூலையில் இருந்தும், சாதாரண ரேடியோ அலை வரிசை மூலமாகவே, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட வீரர்களுடன் பேசி மகிழலாம் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.