Show all

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மபந்தன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிகழ்வொன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறோம். சம்பூர் மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக நமது பிரச்சினைக்கு நமது தேசியப் பயணத்திற்கான தீர்வு வெளிவரும்..

நமது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாமற்றது என்று கூறமுடியாது.

இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது. அதில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் அறிக்கையை வருகின்ற தேர்தல் மூலம் எமது மக்கள் நிருபிக்க வேண்டும் இதனை எமது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும், செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.