Show all

அரசின் புதிய முடிவு பிறந்தநாள் கொண்டாடும் பிரியர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது

நமது ஊரில் செல்வம் படைத்தவர்கள் மட்டுமே தங்களது ஒவ்வொரு பிறந்தநாளையும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் சீனா போன்ற பிற நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரும் கூட பிறந்த நாளை ஆர்வத்துடன் கொண்டாடுவர். இந்த நிலையில் சீனாவின் சிசுவான் மாநில அரசின் புதிய முடிவு பிறந்தநாள் கொண்டாடும் பிரியர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாநிலம் தோங்ஜி யாங் பகுதியில் 70 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும், பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு பரிசுகள் வழங்கவும் அதிக அளவில் பணம் செலவிடப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுவதாகவும் இதனால் நிதி ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே மக்களின் நலன் கருதி 70 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பிறந்த நாள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 70 வயதை தாண்டியவர்கள் மட்டும் தங்களது பிறந்த நாளை கொண்டாடி கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஆதரவு கருத்துகளும் வலுத்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.