Show all

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தம்

பாம்பன் பகுதியில் மீன்களுக்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் பகுதியில் 95 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டும் தென் கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு கடந்து ஜூலை 31 ஆம் தேதி முதல் வியாபாரிகள் போதுமான விலைக்கு வாங்குவதில்லை. இதனால் வருவாய் கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் கேரளா, மங்களூர் ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு மீன் வரத்து அதிகமாக கிடைத்து வருவதால், கொள்முதல் வியாபாரிகளுக்கு அப்பகுதிகளில் குறைந்த விலைக்கு போதுமான மீன்கள் கிடைக்கின்றன. இதனால் பாம்பன் பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாக மீன்களை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் வழக்கத்தைவிட குறைவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.