Show all

அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தமிழக அரசின் வாதத்துக்கு இன்று பதில் அளித்த நீதிபதிகள் ராஜீவ் காந்தி கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிராகரிக்கப்பட்டது என்பது அவர்களின் தண்டனைக் குறைப்பு எனும்போது, அவர்களை விடுதலை செய்து மீண்டும் தண்டனைக் குறைப்பு என்பது எப்படி சாத்தியமாகும்? கொலைக் குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து தண்டனைக் குறைப்பு செய்வது சரியாகுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதோடு நீதிமன்றத்தின் தொடர் ஆய்வுக்குப் பிறகே தமிழக அரசு விடுதலை செய்வது சரியா என்று முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் இன்றைய வாதத்தில் கூறியுள்ளனர்.இந்த வழக்கின் விசாரணை தினமும் நடைபெற்று வருவதுக் குறிப்பிடத் தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.