Show all

விரலை மென்று கைரேகையை அழிக்க முயற்சித்த கொடூர குற்றவாளி

ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல் துறையின் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு, கை ரேகையை அழிக்க விரலை மென்று திண்ண முயன்ற வீடியோ பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, கென்சோ ராபர்ட் என்னும் 20 வயது இளைஞர் பென்ஸ் காரை திருடியட் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கைது செய்து அவரை ரோந்து வாகனத்தில் அமர வைத்துவிட்டு போலீஸார் சென்றுவிட்டனர். அந்த வாகனத்தில் கேமரா பொருத்தப்பட்டதை அறியாத ராபர்ட், தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க உதவும் தனது கைரேகையை, பற்களால் விரலை மென்று அழிக்க கடுமையாக முயற்சி செய்துள்ளார். மேலும் விரலில் உள்ள தோளை பற்களால் நீக்க அழுது கொண்டே முயற்சி செய்துள்ளார். இவை அனைத்தும் ரோந்து வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.