Show all

கின்னஸ் சாதனை பெற்ற பெரு ஃபேஷன்ஷோ

பெருவில் தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற ஃபேஷன்ஷோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேஷன் ஷோவில், மாடல் பெண்கள், அழகிய ஆடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சாதனை புத்தகமான கின்னஸில் இடம்பெறுவது பலரின் லட்சியமாக உள்ளது. இதன்படி, பெரு நாட்டைச் சேர்ந்த மாடல் பெண்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீண்ட நேரம் பேஷன் ஷோவை நடத்த முடிவு செய்தனர். பெருவில் உள்ள லிமாவில், 30 மணி நேர பேஷன் ஷோ என்ற தலைப்பில் நவநாகரீக ஆடை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், ஆண், பெண் உள்ளிட்ட 300 மாடல்கள் பங்கேற்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில் ஆடை அணிவகுப்பில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பிரபல மாடல் அழகி நிசு காவுட்டி தெரிவித்தார்.

பெருவில், உள்ள கமாரா என்ற நகரம் ஜவுளித்துறைக்கு மிக பிரபலமானதாக கருதப்படும். எனவே, அந்த பகுதியில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் புதிய மாடல் உடைகள் வரவழைக்கப்பட்டு மாடல் பெண்களுக்கு வழங்கப்பட்டது. பல வண்ணங்களில், பல வடிவங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்த ஆடைகளை ஆண், மற்றும் பெண் மாடல்கள் அணிந்த படி அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெருவில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம், இதே போல் பேஷன் ஷோ நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம், 28 விநாடி வரை நீடித்த இந்த பேஷன் ஷோ கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில் இடம் பெற்றிருந்தது. இதனை முறியடிக்கும் வகையில் 30 மணிநேர பேஷன் ஷோ நடத்தப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க பெருவை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த பேஷன் ஷோ பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க தவறவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.