Show all

வாசிம் அக்ரம் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். அப்போது வாசிம் அக்ரமின் காரை ஒட்டி கார் ஒன்று வந்தது. காரில் இருந்த மர்ம நபர்கள் திடீரென வாசிம் அக்ரம் கார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அதிருஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி வாசிம் அக்ரம் தப்பினார். எதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என்று தெரியவில்லை.

காரின் அடையாள எண்ணை குறித்து வைத்துள்ளதாகவும் அதை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன் என்றும் உள்ளூர் ஊடகங்களுக்கு வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமிரா மூலம் கார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தியவரை கண்டுபிடிப்போம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தடம்புரண்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு மத்தியப்பிரதேச மாநிலத்தில் இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஹார்டா பகுதியில் நேற்றிரவு 2 ரயில்கள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து தடம் புரண்டன. வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த காமயானி எக்ஸ்பிரஸ் ரயில், ஹார்டா மாவட்டத்தில் கிரியா கிராமத்தின் வழியாக, மச்சக் ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில் அதே ரயில்வே மேம்பாலத்தில் மும்பையில் இருந்து ஜபல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கிய 300 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.