Show all

வரி விலக்கில் அரசியலா!

பெரிய பட்ஜெட் படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கும் சேனல்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சன்னும் ஜெயாவும்தான்.

அப்படியிருந்தாலும், ஜெயாவை விட சன்னுக்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஏன்? படம் பெரும்பாலான மக்களையும் சென்றடைய வேண்டுமல்லவா? அதனால்தான். இந்த நிலையில் பாபநாசம் படத்தை சன் வாங்கிவிட்டது. சொல்லி வைத்தார் போல அந்த படத்திற்கு வரிவிலக்கை மறுத்துவிட்டது அரசு. ஆனால் அந்த படத்திற்கு வரிவிலக்கு தராத அரசின் முடிவு சரியானதுதான் என்று தராசில் நிறுத்து பதில் சொன்னார் கமல். இப்போது புலி படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது. ஏன்? பதில் சொல்வதில் ஒரு சிரமமும் இல்லை. அதே.... அதேதான்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.