Show all

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது மத்திய உணவு ஆய்வகம் தகவல்

மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த உணவுப் பொருள் பாதுகாப்பானது என மத்திய உணவு ஆராய்ச்சி மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்த உணவுப் பொருளுக்கு பல்வேறு மாநில அரசுகள் கடந்த ஜீன் மாதம் தடைவிதித்தன.

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என்று கூறி, இந்திய உணவுக்கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையமும், அதனை விற்பனை செய்ய தடைவிதித்தது. இந்நிலையில் மேகி நூடுசில் உணவுக்கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று, அந்த ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மைசூருவில் உள்ள உணவுக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன ஆய்வகம் கூறியுள்ளது.

கோவா ஆய்வகத்திலிருந்து அனுப்பப்பட்ட மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்து, இந்த தகவலை மைசூரு ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.