Show all

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த பீஜிங் நகரம் தேர்வு

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 128வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மலேஷிய தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது. இதில் 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. கோலாலம்பூர் மாநாட்டு அரங்கில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், 2022ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த சீன தலைநகர் பீஜிங், கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி ஆகிய நகரங்கள் போட்டியிட்டன.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 85 உறுப்பினர்கள் இதில் வாக்களித்தனர். இதில் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீன தலைநகர் பீஜிங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 2018ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியான்சாங் நகரிலும், 2020 கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.