Show all

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்துகுள்ளாகியுள்ளன

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் அளித்த பதில் வருமாறு:-

2012-13, 2013-14, 2014-15 மற்றும் இந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி வரையில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 14 ஹெலிகாப்டர், 2 பயிற்சி விமானங்கள் உள்பட 39 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துக்களில் 36 வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் பலியாகவில்லை. இதுவரை பொதுமக்களுக்குச் சொந்தமான ரூ 4,43,800 மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் விபத்து விகிதம் குறைந்துள்ளது. 1970களில் 20 சதவீதமாக இருந்த விபத்துக்கள், 2001-10 காலகட்டத்தில் 17 சதவீதமாக குறைந்துள்ளது. அது மேலும் குறைந்து 2011-15 காலகட்டங்களில் ஆண்டுக்கு 5 விபத்துக்கள் `என்ற அளவில் இருந்தது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.