Show all

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்?

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் குருதாஸ் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குருதாஸ் காமத் நகராட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி குறித்து பேசியதாவது:-

மனித வளத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் ஸ்மிருதி இரானி 10-ம் வகுப்பு வரை படித்தவர். அவர் ஒட்டலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர். அவரது குடும்பம் பண வசதி இல்லாத குடும்பம். மாடலிங் துறைக்கு வருவதற்கு முன் மும்பையில் உள்ள துரித உணவகத்தில் வேலை செய்தவர். அவரை மனித வளமேம்பாட்டு துறை மந்திரியாக மோடி நியமித்தது ஏன்? மோடி ஒரு ஹிட்லர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.