Show all

நியூ ஜெர்சி பலூன் திருவிழா

அமெரிக்காவில் 2015-ஆம் ஆண்டிற்கான நியூ ஜெர்சி பலூன் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் இடம்பெற்று வானில் வர்ண ஜாலம் காட்டின.அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 33-ஆவது ஆண்டு பலூன் திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணமயமான பலூன்கள் வானில் வர்ணஜாலம் காட்டின.

பூனை, ஆமை, பாண்டா போன்ற பல்வேறு உருவங்களில் இடம் பெற்றிருந்த பலூன்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். இக்காட்சிகள் காண்போரின் கண்களைக் கவர்ந்தன.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் பெரிய விழாக்களில் இந்த விழாவும் ஒன்று என விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.