Show all

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற என்.எல்.சி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ஆம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சாஸ்திரி பவனில் நேற்று நடைபெற்றது.

காலை 11 மணியளவில் துவங்கிய இந்த பேச்சுவார்த்தை 1.30 மணியளவில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில், உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நல ஆணையத்தின் மண்டல ஆணையர் சேகர், இன்று என்.எல்.சியின் நிர்வாக தலைவர் மற்றும் இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை மறுநாள் மீண்டும் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளன.

என்எல்சி தொழிலாளர்களின் போராட்டத்தால் தற்போது வரை 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.