Show all

ராஜிவ்கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுதமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மருத்துவர

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்தியபுலனாய்வுப்பிரிவு (CBI) அதிகாரி வி. தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் இப்பிரச்சினையில் நடுவண் அரசு மேற்கொண்டுள்ள புதிய நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ் ஆகிய 7 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறுநிலைகளில் அவர்களின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டநிலையிலும், கடந்த 25 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யும் தமிழகஅரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதால் அவர்களின் விடுதலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடைபட்டிருக்கிறது. இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டது குறித்து இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் உள்ளிட்டோர் பின்னாளில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதை விட முக்கியமாக இந்த வழக்கை விசாரித்த மத்தியபு லனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் தியாகராஜன் கடந்தசில மாதங்களுக்கு முன் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது புதியதலை முறை தொலைக்காட்சிக்கு அவர்அளித்த நேர்காணலில் ஏற்கனவே தெரிவித்த தகவல்களை மீண்டும் ஒருமுறை விரிவாக தெரிவித்ததுடன், அந்த உண்மையை உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ‘‘ராஜிவ்கொலை வழக்கில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை நான் தான் பதிவு செய்தேன்.

‘‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கி வந்து சிவராசனிடம் கொடுத்தேன். ஆனால் அவைஎதற்காக வாங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது’’என்று பேரறிவாளன் அளித்தவாக்கு மூலம் உண்மையா... பொய்யா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்றஎண்ணத்தில் அவரது வாக்கு மூலத்தின் ஒரு பகுதியை நீக்கி விட்டு பதிவு செய்தேன். ஒரு கட்டத்தில் சிவராசனின் வயர்லெஸ் உரையாடல் பதிவில் தங்களின் சதித்திட்டம் ஒரு இந்தியப் பெண்மணி தவிரவேறு யாருக்கும் தெரியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தான் அறிவு அளித்த வாக்கு மூலம் உண்மை என எனக்குத் தெரிந்தது.

ஆனால், அப்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அப்போதுவாக்கு மூலத்தை சரியாகபதிவு செய்திருந்தால் பேரறிவாளன் இன்று வெளியில் நடமாடிக்கொண்டிருந்திருப்பார். பேரறிவாளன் அப்பழுக்கற்றவர்; ஒழுக்கசீலர்; அவர்மீது எந்தத்தவறும் கிடையாது. அப்போது நான் செய்த தவறைதிருத்தும் நோக்குடன் நடந்த உண்மைகள் அனைத்தையும் உறுதிமொழிப் பத்திரமாக தயாரித்து மத்தியபுலனாய்வுப்பிரிவு வழக்கறிஞரிடம் அளித்திருக்கிறேன். அதை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’என்பது தான் தியாகராஜன் தெரிவித்த புதியதகவல் ஆகும். இதன் மூலம் இவ்வழக்கில் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் பொய்யானவை என நான் தொடர்ந்து கூறிவந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டது.

அதுமட்டுமின்றி, ‘‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்மமுடிச்சுகள் ஏராளமாக உள்ளன. நீதிபதி ஜெயின் ஆணையம் குறிப்பிட்ட அம்சங்கள் பற்றி முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விடுதலைப்புலிகள் குறித்த கோணத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்டது. உண்மையில் இஸ்ரேல் நாட்டின் மொசாத் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு குறித்தகோணத்திலும் விசாரிக்கப்பட்டிருக்கவேண்டும். ராஜிவ்கொலையில் உள்நாட்டு சதியும் இருக்கலாம்’’என்றும் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட தகவல்களின் மூலம் இந்தவழக்கின் அடிப்படையே தகர்க்கப்பட்டிருக்கிறது. தியாகராஜன் வெளியிட்டுள்ள புதியதகவல்களின் அடிப்படையிலும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டியது அவசர, அவசியமானது ஆகும்.

ஆனால், நடுவண் அரசோ இவ்வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு மறு ஆய்வுமனுதாக்கல் செய்திருக்கிறது. நிரபராதிகளுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க நடுவண் அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. ராஜிவ் கொலை வழக்கில் தியாகராஜன் புதிய தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் அளித்த உறுதிமொழிப்பத்திரத்தை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பேரறிவாளனும், மற்றவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நடுவண், மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.