Show all

11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு

பிரேசிலில் சுமார் 11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாம்பின் எலும்பு கூட்டின் அடிப்பாகத்தில் மிக சிறிய 4 கால்கள் உள்ளன. இதன் மூலம் பாம்பு இனம் கடல்வாழ் உயிரினங்களில் இருந்து உருவானவை அல்ல. பல்லி இனங்களின் பரிணாம வளர்ச்சி என்பது உறுதியாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 4 கால் பாம்பு தனது சிறிய கால்களை நடக்க பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வேட்டையாடிய சிறிய விலங்குகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள பயன்படுத்தியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.