Show all

தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்ற பராக் ஒபாமாவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பராக் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் காலமாகிவிட்டாலும் ஒபாமாவின் தந்தை வழி உறவினர்கள் இப்போதும் கென்யாவில் வசிக்கின்றனர். அவர்களை சந்திப்பதுடன் தொழில் முதலீட்டாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவும் அதிபர் ஒபாமா கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு சென்றுள்ளார். நைரோபி விமான நிலையத்தில் அவரை கென்ய அதிபர் யுகுரு கென்யேட்டா கைகுலுக்கி வரவேற்றார். ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்தில் அவரது உறவினர்களும் திரண்டிருந்தனர்.

ஒபாமாவை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான கென்யர்கள் நைரோபின் வீதிகளில் குவிந்தனர். பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஒபாமா தாம் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் தமது கென்ய உறவினர்களுடன் இரவு உணவு அருந்தினார். அவரது தந்தை எடுத்து வளர்த்த பாட்டி சாரா, சகோதரி அபூமா ஒபாமா உள்ளிட்ட பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

கென்ய பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு பேச்சு வார்த்தை ஒன்றிலும் கலந்து கொண்ட பின்னர் ஒபாமா எத்தியோப்பியாவுக்கு செல்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்த போது ஒபாமா கென்யாவிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.