Show all

கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் செர்பல் தேவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது யூடியூப்பில் பிரபலம் அடைந்துவருகிறது.

இந்தவீடியோவில் .நீங்கள் கன்னிமேரி திருவுருவ ஓவியத்தை உற்றுப்பார்த்தால் அதில் உதடுகள் ஏதோசொல்வது போல் அசை வதை காட்டுகிறது. தேவாலயத்திற்கு வரும் கத்தோலிக்கர்கள் உண்மையில் இது இரு அதிசயம் என வியக்கின்றனர். எனினும் இது லைட்டிங் விளைவால் ஏற்படுத்தபட்டது என்றும் உண்மையில் உதடுகள் அசையவில்லை எனவும் மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். இருந்தும் இந்த வீடியோயூ டியூப்பில் பரவிவருகிறது. .இந்தவீ டியோ கடந்த 19- ந் தேதி எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவை எடுத்த பக்தர் ஒருவர் கூறும் போது பார்வையாளர்களே இதை தெளிவுபடுத்த வேண்டும் .நான் ஓவ்வொரு பிரார்த்தனையின் போதும் பார்க்கிறேன். பிரார்த்தனை இறுதியில் ஜெபமாலை ஜெபிக்கிறேன். இதை உறுதிபடுத்த வேநான் இந்த வீடியோவை எடுத்து உள்ளேன். நான்பல்வேறு ஒளிவடிவங்களில் பார்த்துள்ளேன் உதடுகள் அசைகின்றன எந்த மாறுதலும் இல்லை என கூறிஉள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.