Show all

திரைப்படத்தயாரிப்பாளர் இப்ராகிம்ராவுத்தர் இன்று காலமானார்

கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 30 படங்களுக்குமேல் தயாரித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இன்று காலமானார்.ஆரம்ப காலங்களில் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரும்பாலுமான திரைப்படங்களைத் தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

கேப்டன் பிரபாகரன்,புலன் விசாரணை உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை, நடிகர் விஜயகாந்த் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இன்று சிகிச்சைப் பலனின்றி இப்ராகிம் ராவுத்தர் உயிர் அவரது உடலைவிட்டுப் பிரிந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.