Show all

பிரதமர் நரேந்திரமோடியை வைகோ சந்தித்துப் பேசினார்

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசித்துள்ளார்.இன்று மதியம் 12 மணியளவில் பிரதமரைச் சந்தித்த அவர் 20 நிமிடங்கள் அவருடன் உரையாடினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஆட்சிப் பொறுப்யேற்ற 14 மாதங்களுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினேன். விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.ஆந்திராவில், செம்மரம் வெட்டியது தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

இந்த சம்பவத்தில், உண்மையைக் குழி தோண்டிப் புதைக்க சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக் காட்டினேன்.மேலும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரினேன். இதுதவிர பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். எனது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலனை செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்” என்றார்.இந்த சந்திப்பின்போது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி பிரதமரிடம் வைகோ மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.