Show all

மோடி-நவாஸ் உறவு...

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது அவ்விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் மோடியின் தாயாருக்கு சேலையை அன்பளிப்பாக வழங்கினார். பதிலுக்கு, மோடியும் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு சால்வையை அன்பளிப்பாக அளித்தார்.

சுந்தர்.சி படம் போல கலகலப்பாக தொடங்கிய மோடி-நவாஸ் உறவு, இப்போது அவ்வளவு இனிமையாக இல்லை.தற்போது, பாகிஸ்தானின் எல்லை தாண்டி தீவிரவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் போன்றவை மீண்டும் தலைதூக்கி வரும் வேளையில் இந்தியா-பாகிஸ்தான் நட்புறவில் சற்று இறுக்கமான சூழ்நிலை நிலவுகின்றது.பிரதமர் மோடிக்கு ரமலான் அன்பளிப்பாக நவாஸ் ஷெரிப் மாம்பழங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் அடாவடித்தனங்களால் கோபத்தில் இருக்கும் இந்தியாவை 'மாம்பழ ராஜதந்திரம்’ மூலம் சமாதானம் செய்யும் நவாஸ் ஷெரிப்பின் நடவடிக்கைக்கு பலன் கிட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளின்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் காவல் காக்கும் இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.