Show all

தேவை ரெயில்வே துறையில் அதிக முதலீடு. அமைச்சர் சுரேஷ்பிரபு கருத்து

ரெயில்வே துறையில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீத வளர்ச்சி கூடும். என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் வளர்ச்சிக்குரிய ஆற்றலை முழுவதும் பயன்படுத்த போக்குவரத்து துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் ரெயில்வே துறையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டால் இந்திய பொருளாதாரம் 2 முதல் 3 சதவீத வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, ரெயில்வே துறையில் சீனா அதிக முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை போக்குவரத்து துறையை ஊக்குவித்து மேம்படுத்த முடியும் என்று அந்த நாடு எடுத்து காட்டியுள்ளது என கூறியுள்ளார்.இந்திய ரெயில்வே துறையில் மக்கள் நெருக்கடி என்பது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளதைச் சுட்டி காட்டியுள்ள அவர், ரெயில்வே துறையில் அதிக முதலீடு மேற்கொள்வதன் வழியே ரெயில்வே பாதையை 2 மற்றும் 3 வழி பாதையாக மாற்ற முடியும் என சுட்டி காட்டியுள்ளார்.

ரெயில்வே துறையில் அதிகார பரவல் இருந்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ரெயில்வே துறை அமைச்சர், ரெயில்வே துறையில் ஒப்பந்த முறை மற்றும் பிற வர்த்தக முடிவுகளை கையாளவில்லை. கொள்கை அடிப்படையிலேயே தற்பொழுது ரெயில்வே துறையின் அமைச்சர் பணிபுரிந்து வருகிறார்.

வெளிப்படையான நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேவைப்பட்டால் முடிவு எடுத்தலில் அதிகார பகிர்வு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுவன்அரசு அமைச்சரவை சமீபத்தில் 400 ரெயில்வே நிலையங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ள பிரபு, வருங்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய மீடியம் போன்று ரெயில்வே துறை காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.