Show all

ஈராக்கில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மார்க்கெட் பகுதியில் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காராணம் உடனடியாக தெரியவில்லை என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.