Show all

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் திடீர் தடை

தமிழகத்துக் காய்கறிகளுக்கு கேரளாவில் தடைவிதிக் கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிரபல தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழகத்துக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கேரள அரசிடம் புகார் அளித்திருப்பதாக அம்மாநில உணவுத்துறை அமைச்சர் அணுப் ஜேக்கப் கூறியுள்ளார்.

“தமிழகத்துக் காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் இத்தகைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்திலிருந்து வரும் பால், இறைச்சிக்கும் தடை விதிப்பது குறித்தும் மாநில அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் அணுப் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.