Show all

புளூட்டோ கோள் எதிர்பார்த்ததை விடப் பெரியது நாசா

புளூட்டோ கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நியூ ஹரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.புளூட்டோவைத் தற்போது நெருங்கியுள்ள நியூ ஹரைசான்ஸ், புளூட்டோ பற்றிய புதிய நிழற்படங்களை தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பி வைத்தது.

இந்த படங்களை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள், புளூட்டோ கோள் எதிர்பார்த்ததை விடப் பெரிய அளவில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.அதன்படி, புளூட்டோ கோளின் விட்டம் சுமார் 2,370 கிலோ மீட்டர் இருப்பதாகவும், ஏற்கனவே கணித்ததைவிட 50 கிலோ மீட்டர் அதிகமாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.