Show all

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றார் கிரீஸ் பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில் இருந்து 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடனாக வாங்கி இருந்தது.

இதை குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த நாட்டால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே தனது நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கிரீசை ஐரோப்பிய கூட்டமைப்பு வற்புறுத்தியது.இறுதியில் கிரீஸ் பிரதமர் நிபந்தனைகளை ஏற்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.