Show all

நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மனிதர்களை தொலைதூர விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் விண்கலனை நாஸா உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத்து.

இந்தப் பணியில் பங்கேற்க, சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட் பென்கென், எரிக் போய் மற்றும் டக்ளஸ் ஹர்லீ ஆகிய அனுபவம் வாய்ந்த நான்கு விண்வெளி வீரர்களை நாஸா தேர்ந்தெடுத்துள்ளது.

இதுகுறித்து நாஸா அதிகாரி சார்லஸ் போல்டன் கூறியதாவது:

வர்த்தகரீதியிலான புதிய விண்கலனை உருவாக்கும் பணியில் இந்த நான்கு வீரர்களும் போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவர். பயிற்சி ஓட்டங்களில் மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த அந்த நால்வரும் பங்கேற்பர் என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.