Show all

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்

இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது பகுதிகளுக்கு அதிகாரபகிர்வு அளிக்கப்பட வேண்டுமென, தமிழர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை பார்லிமென்டுக்கு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:ஒருங்கிணைந்த இலங்கையில், தமிழர்களின் புனர் வாழ்வுக்கென மேற்கொள்ளப்பட்டு வரும், மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும். உள்நாட்டு போரின்போது, ராணுவ தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்கள், தேர்தலுக்கு பின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.