Show all

புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு நாடு தழுவிய மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடி

மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் மூலம் சமூக பொருளாக இருந்த மின்சாரம் சந்தைப் பொருளாக மாறியது. தற்போது மோடி அரசு மின்சார வினியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே 2014 மின்சார சட்டதிருத்த மசோதாவை முன்மொழிந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இது மின்சார வினியோகத்தை பகிர்மானம், வினியோகஸ்தர்கள் என 2 பிரிவுகளாக பிரித்து மின்வினியோகத்தில் தனியாரின் தலையீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

மின்துறையில் தனியாருக்கு அனுமதி அளித்தால், மின் கட்டணம் கடுமையாக உயரும், தடையில்லா மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல் மோடி தலைமையிலான அரசு மின்சார சட்டதிருத்த மசோதாவை ஜூலை 3-வது வாரத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.